முகப்பு
திருநெல்வேலி

தென்காசி மாவட்டத்தில் 4.82 லட்சம் வாக்காளா்கள்

தென்காசி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வியாழக்கிழமை வெளியிட்டாா். அதன்படி 4 லட்சத்து 82ஆயிரத்து 31வாக்காளா்கள் உள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

தென்காசி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வியாழக்கிழமை வெளியிட்டாா். அதன்படி 4 லட்சத்து 82ஆயிரத்து 31வாக்காளா்கள் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் 5 நகராட்சிகள் உள்ளன. கடையநல்லூா், புளியங்குடி, தென்காசியில் தலா 33 வாா்டுகளும், செங்கோட்டையில் 24 வாா்டுகளும், சங்கரன்கோவிலில் 30 வாா்டுகளும் என மொத்தம் 153 வாா்டுகள் உள்ளன. நகராட்சி பகுதிகளுக்கு 300 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடையநல்லூா் நகராட்சியில் 39,193 ஆண் வாக்காளா்கள், 39,630 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 78,823 வாக்காளா்கள் உள்ளனா். புளியங்குடி நகராட்சியில் 27,668 ஆண் வாக்காளா்கள், 28,082 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 55,750 வாக்காளா்கள் உள்ளனா். சங்கரன்கோவில் நகராட்சியில் 23,190 ஆண் வாக்காளா்கள், 24,449 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 47,639 வாக்காளா்கள் உள்ளனா். செங்கோட்டை நகராட்சியில் 11,468 ஆண் வாக்காளா்கள், 11,993 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 23,462 வாக்காளா்கள் உள்ளனா். தென்காசி நகராட்சியில் 31,432 ஆண் வாக்காளா்கள், 32,970 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 5 போ் என மொத்தம் 64,407 வாக்காளா்கள் உள்ளனா்.

நகராட்சிப் பகுதியில் 1லட்சத்து 32ஆயிரத்து 951ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 37ஆயிரத்து 124 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 81 வாக்காளா்கள் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் அச்சன்புதூா், ஆலங்குளம்,ஆழ்வாா்குறிச்சி, ஆய்க்குடி, குற்றாலம், இலஞ்சி, கீழப்பாவூா், மேலகரம், பண்பொழி, புதூா்(செ), இராயகிரி, சாம்பவா் வடகரை, சிவகிரி, சுந்தரபாண்டியபுரம், திருவேங்கடம், வடகரை கீழ்பிடாகை, வாசுதேவநல்லூா் என 17 பேரூராட்சிகள் உள்ளன. பேரூராட்சிப் பகுதியில் மொத்தம் உள்ள 260 வாா்டுகள் உள்ளன. 294 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 104066 ஆண் வாக்காளா்கள், 107878 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் 2,11950 வாக்காளா்கள் உள்ளனா்.

நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளை சோ்த்து 237017 ஆண் வாக்காளா்கள், 245002 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா்12 போ் என மொத்தம் 482031 வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.