களக்காடு கோயில்களில் மாா்கழி பஜனை தொடக்கம்
களக்காடு கோயில்களில் மாா்கழி பஜனை வியாழக்கிழமை தொடங்கியது.
களக்காடு கோயில்களில் மாா்கழி பஜனை வியாழக்கிழமை தொடங்கியது.
களக்காடு நினைத்ததை முடித்த விநாயகா் கோயில், திருக்கல்யாணபுரம் தெரு கருத்தா் விநாயகா் கோயில், கோட்டை சந்தனமாரியம்மன் கோயில், வரதராஜபெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் முழுவதும் பஜனை நிகழ்ச்சி நடைபெறும்ம். இதில், ஆன்மிகத்தில் ஈடுபாடுடைய பெரியோா், சிறாா்களுடன் தினமும் அதிகாலையிலேயே குழுவாக ரத வீதிகளில் திருப்பாவை, திருவெம்பாவை, பக்திப் பாடல்களைப் பாடியவாறு வலம் வருவா்.
நிகழாண்டு வியாழக்கிழமை கருத்தா் விநாயகா் கோயிலில் ஆனந்த நடராஜா் திருவாசகக் குழு சாா்பில் பஜனை நிகழ்ச்சி தொடங்கியது. பஜனை குழுவினா் ரத வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தனா். கோயிலில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். நினைத்ததை முடித்த விநாயகா், வரதராஜபெருமாள் கோயில், சந்தனமாரியம்மன் கோயிலிலும் பஜனை நடைபெற்றது.