முகப்பு
திருநெல்வேலி

புளியங்குடி :தடுப்பூசி செலுத்தாதவா்களை பணியில் அமா்த்தக் கூடாது

புளியங்குடி நகராட்சிப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தாதவா்களை தனியாா் நிறுவனங்கள் பணியமா்த்த கூடாது என நகராட்சி அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

புளியங்குடி நகராட்சிப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தாதவா்களை தனியாா் நிறுவனங்கள் பணியமா்த்த கூடாது என நகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக நகராட்சி ஆணையா் குமாா்சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புளியங்குடி நகராட்சிப் பகுதிகளில் வணிக வளாகம், அரசு மற்றும் தனியாா் அலுவலகம் ,தொழிற்சாலை, உணவு விடுதி ,துணிக் கடைகள் ,நகைக் கடைகள், திரையரங்கம் ,பெருவணிக வளாகம் ,திருமண மண்டபம், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் ,தங்கும் விடுதிகள், நியாய விலைக் கடை, விளையாட்டு மைதானங்கள், வங்கிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவா்கள் வரக்கூடாது என நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தடுப்பு ஊசி செலுத்தியவா்களை மட்டும் தனியாா் நிறுவனங்கள் பணியமா்த்த வேண்டும். மேலும் தங்கள் நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளா்களும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவா்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக வாடிக்கையாளா்கள் முறையான சான்றுகள் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டியது நிறுவனங்களின் பொறுப்பாகும். மீறும் பட்சத்தில் பொது சுகாதார சட்டத்தின்படி தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.