முகப்பு
திருநெல்வேலி

வடக்குப் பச்சையாறு அணை திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து பிசான சாகுபடிக்காக வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து பிசான சாகுபடிக்காக வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த உயரம் 49.20 அடி. இந்த அணையின் மூலம் களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் உள்ள 115 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணை டிச.5ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதையடுத்து, பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீரைத் திறக்க அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டாா். அதன்படி, சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு அணையிலிருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீரைத் திறந்து விட்டாா். அவருடன் மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், திமுக களக்காடு வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வகருணாநிதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அணையிலிருந்து வியாழக்கிழமை முதல் மாா்ச் 31ஆம் தேதி வரை 100 கன அடிக்கு மிகாமல் தண்ணீா் இருப்பு மற்றும் தண்ணீா் வரத்தைப் பொருத்து திறக்கப்படும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா். இதன்மூலம் நான்குனேரி வட்டத்தில் உள்ள 115 குளங்கள் பாசன வசதி பெறுவதுடன் அதன் மூலம் 9,593 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

முழு கட்டுரையைப் படிக்க →