முகப்பு
திருநெல்வேலி

சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல இன்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வெள்ளிக்கிழமை ( டிச.31) முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வெள்ளிக்கிழமை ( டிச.31) முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் வெள்ளிக்கிழமை( டிச.31) முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை செல்ல தடை விதிக்கப்படுகிறது.

மத வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் பொது மக்கள் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு , சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கரோனா தடுப்பூசி முகாம் களில் பொதுமக்கள் முறையாக தடுப்பு ஊசி செலுத்தி பாதுகாப்பான நிலையினை அடைய ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.