கர படத்தின் கதாபாத்திரங்கள் சிறப்பு விடியோ!
கர திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக விடியோ வெளியானது குறித்து...
நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள “கர” திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.
போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “கர”. இப்படத்தை, வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
90-களில் நடைபெறும் வங்கிக் கொள்ளையைப் பற்றிய கதைக்களத்தில் அமைந்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இத்துடன், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், கர திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் “ஃபேசஸ் ஆஃப் கர” எனும் சிறப்பு விடியோவை படக்குழு வெள்ளிக்கிழமை (மார்ச் 27) அன்று வெளியிட்டுள்ளது.
மேலும், வரும் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள “கர” படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
The character introduction video for the movie “Kara” has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.