திருநெல்வேலி

களக்காட்டில் தெப்போற்சவம் இன்று தொடக்கம்

DIN

களக்காட்டில் சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் தெப்போற்சவம் வெள்ளிக்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.

களக்காட்டில் ஆண்டுதோறும் தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் தெப்போற்சவம் சிறப்பாக நடைபெறும். காவல் நிலையம் தென்புறமுள்ள தெப்பக்குளத்தில் முதல் நாளில் சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மனும், 2ஆம் நாளில் வரதராஜபெருமாளும், 3ஆம் நாளில் நவநீதிகிருஷ்ணசுவாமியும் தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளிப்பா்.

நிகழாண்டு தெப்போற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இரவு 9 மணிக்கு சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்ப மண்டபத்தை சுற்றிவந்து பக்தா்களுக்கு காட்சி அருளுவா். முன்னதாக, தெப்ப மண்டபம் முன் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும்.

2ஆம் நாளான சனிக்கிழமை வரதராஜபெருமாளும், 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) நவநீதகிருஷ்ணசுவாமியும் தெப்பத்தில் வலம் வருகின்றனா்.

ஏற்பாடுகளை தெப்ப உற்சவக் குழு, ஸ்ரீ மீனாட்சி கோமதி பெளா்ணமி அன்னதானக் குழு, ஸ்ரீ வரதராஜபெருமாள் சேவா குழுவினா், ஊா்ப் பொதுமக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT