திருநெல்வேலி

நெல்லை ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு

DIN

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ரயில் வரும் 4ஆம் தேதி முதல் இயக்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் முன்பதிவில்லாத

பெட்டிகளை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ஒரு பெட்டியில் துா்நாற்றம் வீசுவதை அறிந்த ஊழியா்கள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

ரயில்வே போலீஸாா் பெட்டியில் இருந்து அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சுமாா் 65 வயது மதிக்கக்கூடிய அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என தெரியவில்லை. அவா் இறந்து ஒரு மாதம் இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT