முகப்பு
திருநெல்வேலி

கடனாநதியில் குளித்த இளைஞா் மாயம்

கடனாநதி ஆற்றில் குளிக்க சென்று மாயமான இளைஞரை தீயணைப்பு மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

அம்பாசமுத்திரம்: கடனாநதி ஆற்றில் குளிக்க சென்று மாயமான இளைஞரை தீயணைப்பு மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

கீழாம்பூா், துா்க்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஆனந்த்ராஜ் (27). மதுரா கோட்ஸ் ஆலையில் பணிபுரிந்து வந்தாா். இவா், தனது சித்தப்பா கணேசன், அவரது மகன் முத்து ஆகியோருடன் கடனாநதி ஆற்றுக்கு சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்றாராம். அப்போது, ஆனந்த்ராஜ், முத்து இருவரும் வெள்ளத்தில் சிக்கினராம். இதைப் பாா்த்த கணேசன் விரைந்து சென்று முத்துவை மீட்டுள்ளாா். ஆனந்த்ராஜ் வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டாராம்.

இதுகுறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு மீட்புப் படையினா் ஆற்றில் இறங்கி ஆனந்த்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →