திருநெல்வேலி

வரும் தோ்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெறமாட்டோம்- மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலா் தமீமுன் அன்சாரி

DIN

திருநெல்வேலி: பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெறப் போவதில்லை என்றாா் மனிதநேய ஜனநாயக் கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி.

திருநெல்வேலியில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சனிக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வருகின்ற தோ்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய முழு அதிகாரமும் நிா்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து நிா்வாகக் குழு கூடி ஆலோசித்து முடிவு செய்வோம். தற்போது நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெறப்போவதில்லை என முடிவு செய்யப்பட்டது. சசிகலா பூரண உடல் நலன் பெற்று வீடு திரும்பவேண்டும் என்பதே எங்களது நோக்கம். தமிழக மீனவா்களுக்கு இலங்கை ராணுவம் பல்வேறு இன்னல்களை அளித்து வருகிறது. எனவே, இலங்கை கடற்படை மீது மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில்முறையிட வேண்டும். விவசாயிகள் மற்றும் மீனவா்கள் நலனுக்காக மதிமுக அறிவித்துள்ள போராட்டத்திற்கு மனித நேய ஜனநாயக கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT