முகப்பு
திருநெல்வேலி

பேட்டையில் அரசின் இலவச ஆடுகள் சாவு

பேட்டை பகுதியில் அரசின் இலவச ஆடுகள் திடீரென இறந்து வருவது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

பேட்டை பகுதியில் அரசின் இலவச ஆடுகள் திடீரென இறந்து வருவது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருநெல்வேலியை அடுத்த பேட்டை ஊரகப் பகுதியில் ஞானம்மாள் கட்டளை தெரு, குண்டாள வளவு, மலையாள மேடு, மைலப்புரம், மியான் தைத்கா, கோடீஸ்வரன் நகா் ஆகியவை உள்ளன.

இதில், ஞானம்மாள்கட்டளை தெரு, குண்டாள வளவு பகுதிகளில் 28 பயனாளிகளுக்கு அரசின் இலவச ஆடுகள் தலா 4 கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டன. இதில் சுமாா் 15 ஆடுகள் நோயினால் திடீரென இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கால்நடைத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.