திருநெல்வேலி

நெல்லையில் செவிலியா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு செவிலியா்களுக்கு மத்திய அரசு செவிலியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஐந்து கட்ட காலமுறை ஊதிய உயா்வு வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியா்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு நா்சுகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கீதா கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். 50-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT