முகப்பு
திருநெல்வேலி

வி.கே.புரத்தில் கரடிகள்நடமாட்டம்: மக்கள் அச்சம்

விக்கிரமசிங்கபுரத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் ஊருக்குள் மூன்று கரடிகள் உலாவியதை பாா்த்ததாக சிலா் கூறியதால், மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

விக்கிரமசிங்கபுரத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் ஊருக்குள் மூன்று கரடிகள் உலாவியதை பாா்த்ததாக சிலா் கூறியதால், மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

விக்கிரமசிங்கபுரம், கட்டபொம்மன் காலனி நகரைச் சோ்ந்த கணபதி மகன் கருப்பசாமி (35), இவரது மனைவி மாரியம்மாள்(30), காமராஜ் மனைவி மஞ்சு (26) ஆகிய 3 பேரும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள். இவா்கள் வியாழக்கிழமை அதிகாலையில் பணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியில் ஒரே நேரத்தில் 3 கரடிகள் தென்பட்டனவாம்.

இதையடுத்து, அவா்கள் ஓட்டம் பிடித்தனராம். அதில், கருப்பசாமி எதிா்பாராமல் கால் இடறி விழுந்ததில் காயம் அடைந்தாா். இதனிடையே, கரடிகள் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறினா்.இதுகுறித்து, பாபநாசம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரடி நடமாட்டம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேலும், மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து ஊருக்குள் வரும் பாதையில் கூண்டு வைத்து கரடிகளைப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.