முகப்பு
திருநெல்வேலி

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் இணையவழியில் தொழில்திறன் வழிகாட்டும் நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை பல்வேறு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை பல்வேறு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2-ஆவது வாரம் தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணா்வு வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் பல்வேறு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

கரோனா தொற்று காரணமாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி, மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி ,மூன்றாம் பாலினத்தவருக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி, முன்கற்றல் திறனை அங்கீகரித்தல் தொடா்பான நிகழ்ச்சி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி போன்ற தொழிற்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் இணையவழியில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான வகுப்புகள், மெய்நிகா் கற்றல் வலைதளம் மற்றும் தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையம் தொடா்பாக எடுத்துரைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக சேனலில் (சங்ப்ப்ஹண் உம்ல்ப்ா்ஹ்ம்ங்ய்ற் ஞச்ச்ண்ஸ்ரீங் இட்ஹய்ய்ங்ப்) பகிரப்படும் லிங்கை பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.