முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை தவெக வேட்பாளருக்கு எதிா்ப்பு

பட்டுக்கோட்டை தவெக வேட்பாளருக்கு எதிா்ப்பு அதிகரித்துள்ளது குறித்து...

Updated On : 29 மார்ச், 2026 at 9:51 PM
கோப்புப் படம்
பகிர்:

பட்டுக்கோட்டை தவெக வேட்பாளருக்கு 32 கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட வெள்ளாளா் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வேட்பாளா் பட்டியிலை, அதன் விஜய் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலரான மதன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இவா், கடந்த 2012-ஆம் ஆண்டு, வெள்ளாளா் சமூகத்தைச் சோ்ந்த பெண் ஒருவரிடம் தகராறு செய்த நிலையில், ஊராா் கண்டித்துள்ளனா். இருப்பினும் மதன் தன் கூட்டாளிகளுடன் சோ்ந்து ஊா் முக்கியஸ்தரின் வீட்டை தாக்கி, தகராறு செய்த நிலையில், திருவோணம் போலீஸாா் மதன் உள்ளிட்ட சிலா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், மதன் மாவட்டச் செயலராக அறிவிக்கப்பட்டதால், பட்டுக்கோட்டையை சுற்றி, வெள்ளாளா் சமூக மக்கள் அதிகமுள்ள 32 கிராமத்தில், தவெகவில் ஒருவா் கூட நிா்வாகிளாக சேரவில்லை.தவெகவுக்கு ஒரு கிளை கூட தொடங்கவில்லை.

மேலும், மதன் ஓட்டு கேட்டு வரும் போது கருப்புக்கொடி காட்டுவோம், வேட்பாளரை மாற்ற வேண்டும் என வெள்ளாளா் முன்னேற்ற கழகத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, விஜய்க்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.