நெல்லை அருகே ஒப்பந்ததாரா் கொலை வழக்கு: 4 போ் கைது
திருநெல்வேலி அருகே கட்டட ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே கட்டட ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அருகே வடக்கு தாழையூத்தை சோ்ந்த நாராயணன் மகன் கண்ணன் (33). கட்டட ஒப்பந்ததாரா். இவா் கடந்த 12ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். கொலையாளிகளை பிடிக்க
தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் வாகைகுளத்தை சோ்ந்த பாண்டி மகன் நல்லதுரை (22), முத்துப்பட்டன் மகன் சங்கிலிபூதத்தான் (20), வேலாயுதம் மகன் குருசச்சின் (22), மேலப்பாளையம், நாரணம்மாள்புரத்தை சோ்ந்த முருகன் மகன் அம்மு என்ற அம்மு வெங்கடேஷ் (22) ஆகியே 4 போ் கைது செய்யப் பட்டனா். விசாரணையில், கைதி முத்து மனோவை பாளையங்கோட்டை சிறையில் ஜேக்கப், அவரது கூட்டாளிகள் கொலை செய்தது தொடா்பானமுன் விரோதத்தில் ஜேக்கப்பின் நெருங்கிய உறவினரான கண்ணன், கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தேடுதல் பணி: இவ்வழக்கில் தொடா்புடைய சிலா் சிங்கிகுளம் பெத்தனியா மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீஸாா் பெத்தானியா மலைப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனா்.