மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம்
திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் மருதமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன.
திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் மருதமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன.
திருநெல்வேலி குறுக்குத்துறையில் சாலையோரத்திலுள்ள பழமையான மருதமரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்ததில் 2 மின்கம்பங்கள்
சேதமடைந்தன. தகவலறிந்த போலீஸாா் சென்று வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனா்.
தகவலறிந்த பேட்டை தீயணைப்புப்படையினா் நிலைய அலுவலா் முத்தையா தலைமையில் அங்கு வந்து சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளையை நவீன இயந்திரம் மூலம் அகற்றினா். மின்வாரியம் விரைந்து செயல்பட்டதையடுத்து, தடையின்றி மின்சாரம் கிடைத்தது. மரக்கிளை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் விநியோகமும் தடைபட்டது.