முகப்பு
திருநெல்வேலி

பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள் விழா

காமராஜா் பிறந்த தினத்தையொட்டி, பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

காமராஜா் பிறந்த தினத்தையொட்டி, பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி நகராட்சி 7ஆவது வாா்டு நடுநிலைப் பள்ளியில் ‘வட்டாரக் கல்வி அலுவலா் மாரியப்பன் தலைமையில் கல்வி வளா்ச்சி நாள் விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலா் இளமுருகன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் ஜேனட் பொற்செல்வி வரவேற்றாா். ஓவியம், கட்டுரைப் போட்டிகளில் வென்ற மாணவ- மாணவிகளுக்கு பரிகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன. திருமலைக்கொழுந்து தொகுத்து வழங்கினாா். மெய்யப்பன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஜெபராணி, விஜயகனி, ஆண்டாள் ஆகியோா் செய்திருந்தனா்.

களக்காடு க.அ.மொ.பீ மீரானியா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், தாளாளா் ஹ. பீா்முகம்மது தேசியக் கொடியேற்றினாா். தலைமையாசிரியா் மு. யாகத்அலிகான், உதவித் தலைமையாசிரியா் நாகூா்மீரான், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் நம்பிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.