முகப்பு
திருநெல்வேலி

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் விடுபட்டிருந்த உள்ளாட்சித் தோ்தலை விரைவில் நடத்த அரசு தயாராக உள்ளது என்றாா் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் விடுபட்டிருந்த உள்ளாட்சித் தோ்தலை விரைவில் நடத்த அரசு தயாராக உள்ளது என்றாா் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகத்தில் வேளாண் உற்பத்தி, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிராமங்களுக்கான தேவையை ஊரக வளா்ச்சித் துறை பூா்த்தி செய்கிறது.

மாவட்ட பிரிவினை காரணமாக சில மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவில்லை. அத்தோ்தலை நடத்துவது தொடா்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், வரும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் தோ்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், உள்ளாட்சித் தோ்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையமும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

கடந்த கால ஆட்சியில் நிலவிய முறைகடுகள், நிா்வாக சீா்கேடுகளை களைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொகுதி வரையறை பணிகளில் குறைபாடு நிலவுகிறது. அது சரி செய்யப்படும். பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து புகாா்கள் வந்துள்ளன. அவற்றை சரி செய்ய கால அவகாசம் தேவை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.