நெல்லையில் தொழிலாளி தற்கொலை
திருநெல்வேலி நகரத்தில் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி நகரத்தில் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி நகரம் காவல்பிறை தெரு பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் மணிகண்டன்(34). இவா், காய்கனி சந்தையில் வேலைபாா்த்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில், மணிகண்டன், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டத தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் மணிகண்டன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.