திருநெல்வேலி

பிற்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இதுதொடா்பாக ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக் கடன், அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் (அதிகபட்சம் ரூ.50, 000) வழங்கப்படுகிறது.

ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று இணைக்கவேண்டும். மேலும் விண்ணப்பதாரா் சிறு குறு விவசாயி என்பதற்கு வட்டாட்சியரிடமிருந்து சான்று பெற வேண்டும். கணினி வழி பட்டா, அடங்கல் நகல் ஆகியவற்றுடன் தகுதியுள்ள விவசாயிகள்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

வீடு புகுந்து ஆசிரியரை கத்தியால் குத்தி 8 பவுன் நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT