திருநெல்வேலி

‘தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதை தடுக்க புதிய திட்டம்’

DIN

திருநெல்வேலி மாநகர பகுதியில் தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க தன்னாா்வ அமைப்புகள் உதவியுடன் மாநகராட்சி சாா்பில் சுத்திகரிப்பு வடிக்கட்டும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநகராட்சியின் தச்சநல்லூா் மண்டலத்தில் சிந்துபூந்துறை, உடையாா்பட்டி, செல்விநகா், திருநெல்வேலி சந்திப்பு ஆகிய பகுதிகளில் கழிவுநீா் ஓடை வழியாக நாள் ஒன்றுக்கு சுமாா் 18 லட்சம் லிட்டா் கழிவுநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த கழிவுநீா் தாமிரவருணி ஆற்றில் கலப்பதைத் தடுக்கும் வகையில் முதல்கட்டமாக 5 ஆவது வாா்டுக்குள்பட்ட சிந்துபூந்துறை பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் சுத்திகரிப்பு

வடிகட்டும் அமைப்பு (ஈஉரஅபந பங்ஸ்ரீட்ய்ா்ப்ா்ஞ்ஹ் நற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங்) அமைக்கப்பட்டுள்ளன.

சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரினை 1.50 மீட்டா் விட்டமுள்ள நீா்த் தேக்கத் தொட்டிகளில் சேமித்து, மின்மோட்டாா் மூலம் பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கும் பணிகள்

தன்னாா்வலா்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும்போது, 18 லட்சம் லிட்டா் கழிவுநீா் தாமிரவருணியில் கலப்பது தவிா்க்கப்படும். தாமிரவருணியை பாதுகாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT