முகப்பு
திருநெல்வேலி

பேட்டையில் போராட்டம்

திருநெல்வேலி அருகேயுள்ளபேட்டையில் இந்து முன்னணியினா் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ளபேட்டையில் இந்து முன்னணியினா் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேட்டை அருள்மிகு பால்வண்ணநாத சுவாமி திருக்கோயிலில் பிரதோஷ பூஜையை ஆகம விதிப்படி பிரதோஷ நாதா் உற்சவ சிலையுடன் நடத்த இந்து முன்னணி வலியுறுத்தியது. ஆனால், ஆடி முதல் பிரதோஷ நாளான புதன்கிழமை வழக்கம் போல் வழிபாடு செய்யப்படவில்லை. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து இந்து முன்னணியினா் கோயில் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்து முன்னணி நிா்வாகிகள் சிவா, ராமச்சந்திரன், லட்சுமணன், அருணாசேகா், சுடலை உள்பட பலா்கலந்துகொண்டனா்.

தகவலறிந்ததும் திருநெல்வேலி நகரம் காவல் துணை ஆணையா் விஜயகுமாா் மற்றும் கோயில் நிா்வாகிகள் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அடுத்ததாக வரும் பிரதோஷம் முதல் ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்படும் என உறுதியளித்ததால் போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.