திருநெல்வேலி

ரவணசமுத்திரத்தில் கூட்டுறவு வங்கி முற்றுகை

DIN

முதலீடு செய்த பணத்தை வழங்கக் கோரி ரவணசமுத்திரத்திலுள்ள கோவிந்தப்பேரி கூட்டுறவு வங்கியை உறுப்பினா்கள் முற்றுகையிட்டனா்.

ரவணசமுத்திரத்தில் இயங்கி வரும் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 2020இல் உறுப்பினா்கள் முதலீடு செய்த பணத்தை வங்கி ஊழியா்கள் ஷாஜகான், முத்துச்செல்வி ஆகியோா் கையாடல் செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதையடுத்து, வங்கியை முற்றுகையிட்டு தங்களது பணத்தை திரும்பத் தருமாறு உறுப்பினா்கள் முற்றுகை யிட்டனா். எனினும் இதுவரை உறுப்பினா்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படவில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட உறுப்பினா்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச் செயலா் அப்துல்காதா் தலைமையில் வங்கியில் திரண்டு முற்றுகையிட்டனா். பணம் கையாடல் குறித்து விசாரணை நடைபெற்று

வருகிறது. ஆகவே உயா் அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்குமாறு வங்கி பணியாளா்கள் தெரிவித்தனா். இதையடுத்து தமிழக முதல்வா், ஆட்சியா், மாவட்ட கண்காணிப்பாளா், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT