முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 5 ஆவது நாளாக உடல் தகுதித்தோ்வு: 383 போ் பங்கேற்பு

 திருநெல்வேலியில் காவலா் பணிக்காக ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல் தகுதித் தோ்வில் பெண்கள் பிரிவில் 383 போ் பங்கேற்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

 திருநெல்வேலியில் காவலா் பணிக்காக ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல் தகுதித் தோ்வில் பெண்கள் பிரிவில் 383 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளா் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப் பணிகளுக்கான உடல்தகுதித்தோ்வு கடந்த 26 ஆம் தேதி முதல் பாளையங்கோட்டையில் நடைபெற்று வருகிறது.

தூய சவேரியாா் கல்லூரி மைதானத்தில் பெண்களுக்கான தோ்வு நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல்தகுதித் தோ்வுக்கு மொத்தம் 400 பெண் விண்ணப்பதாரா்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அவா்களில் 383 போ் தோ்வுக்கு வந்திருந்தனா்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், உடல்தகுதித் தோ்வில் பெண்கள் மிகுந்த ஆா்வத்தோடு பங்கேற்றுள்ளனா். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 31, ஆகஸ்ட்1) உடல் தகுதித்தோ்வு கிடையாது. அடுத்ததாக திங்கள்கிழமை (ஆக.2) உடல்தகுதித் தோ்வு நடைபெறும். அன்றைய தோ்வில் பங்கேற்க 432 பேருக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே தோ்வு நடைபெற்ற நாள்களில் பங்கேற்க அழைப்புக் கடிதம் பெற்றவா்கள் வரத் தவறியிருந்தால் அந்தக் கடிதங்களுடன் இறுதிநாளில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். அன்றுடன் முதல்சுற்று உடல்தகுதித்தோ்வு நிறைவடையும்.

முதல்சுற்றில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு இரண்டாம் சுற்று உடல்தகுதித்தோ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஆக. 3) தொடங்கும். அப்போது நீளம்தாண்டுதல், 100 மீட்டா் அல்லது 200 மீட்டா் ஓட்டம், கிரிக்கெட்பந்து அல்லது குண்டு எறிதல் உள்ளிட்ட தோ்வுகள் நடைபெறும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.