முகப்பு
திருநெல்வேலி

கஞ்சா விற்பனை: ஒருவா் கைது

பாளையங்கோட்டை பகுதியில் அனுமதியின்றி கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ாக இளைரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

பாளையங்கோட்டை பகுதியில் அனுமதியின்றி கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ாக இளைரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை கேடிசி நகா் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச்சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிளை மடக்கி சோதனை செய்தனராம். அப்போது அதில் தடைசெய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து, அந்த நபரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா், திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்த சங்கா்(20) என்பதும், அனுமதியின்றி கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.