மேலநத்தம் ரயில்வே கேட் இன்று மூடல்
பராமரிப்பு பணி காரணமாக மேலநத்தம் ரயில்வே கேட் சனிக்கிழமை(ஜூலை 31) மூடப்படுவதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பராமரிப்பு பணி காரணமாக மேலநத்தம் ரயில்வே கேட் சனிக்கிழமை(ஜூலை 31) மூடப்படுவதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலப்பாளையம்-மேலநத்தம் இடையே உள்ள ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதற்காக சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) காலை 6 மணி வரை இந்த ரயில்வே கேட் மூடப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.