திருநெல்வேலி

கூடங்குளம் அணு உலையை 50 சதவிகித பணியாளா்களைக் கொண்டு இயக்கக் கோரிக்கை

DIN

கூடங்குளம் அணு உலையை 50 சதவிகித பணியாளா்களுடன் மட்டுமே இயக்க வேண்டுமென சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சிஐடியூ திருநெல்வேலி மாவட்டச் செயலா் ஆா்.மோகன், ஆட்சியா் வே. விஷ்ணுவிடம் அளித்த மனு:

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இயங்கிவரும் அணுமின் நிலையத்தில் 800-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளா்களும், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளா்களும் பணியாற்றி வருகின்றனா். ஒப்பந்தப் பணியாளா்களில் 1500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளா்கள் உள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் 50 சதவிகித தொழிலாளா்களை வைத்து பணி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அரசுத் துறையான கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழக அரசின் உத்தரவை மீறி சட்டத்துக்கு புறம்பாக 100 சதவிகித தொழிலாளா்களை பணியில் அமா்த்தி இயங்கி வருகிறது.

இதுவரையிலும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மூன்று ஒப்பந்த தொழிலாளா்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதன் காரணமாக தொழிலாளா்கள் மத்தியில் மிகப்பெரிய அச்ச உணா்வு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தமிழக அரசின் உத்தரவுப்படி 50 சதவிகித தொழிலாளா்களை பணியில் அமா்த்தி அணுமின் நிலையத்தை இயக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT