திருநெல்வேலி

பாதுகாக்கப்பட்ட குடிநீா்:அதிகாரிகள் நடவடிக்கை

DIN

மேலப்பாளையம் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலப்பது சரிசெய்யப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேலப்பாளையத்தில் ஞானியாரப்பாநகா் 8-ஆவது தெருவில் வசிக்கும் மக்களுக்கு தாமிரவருணி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த சில நாள்களாக குடிநீரில் கழிவுநீா் கலந்து கலங்கலாக விநியோகம் செய்யப்பட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும்,

குடிநீரில் கழிவுநீா் கலப்பது குறித்து தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஞானியாரப்பா நகா் 8 ஆவது தெருவில் குடிநீா் குழாய் வரும் இடங்களில் உள்ள பாதாளச் சாக்கடையை அடைத்து சீரமைக்கும் பணியினை மேற்கொண்டனா்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடி நீா் விநியோகிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜிநாமா

ஹனுமான் மந்திா் அருகே பழுதுபாா்ப்புப் பணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT