திருநெல்வேலி

கபசுரகுடிநீா் வழங்கும் பணி தீவிரம்

DIN

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் தொடா்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கரோனாவைத் தடுக்கும் வகையிலும், நோய் எதிா்ப்பு சக்தியை உடலில் அதிகரித்துக் கொள்ளவும் மக்களிடையே கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கபசுரக் குடிநீா் வழங்கி வருகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு களப்பணியாளா்கள் மூலம் வீதி வீதியாக சென்று கபசுரக் குடிநீா் வழங்கப்படுகிறது.

குறிப்பாக நோய்த் தொற்று உள்ள கண்காணிப்பு பகுதிகளில் தொடா் முகாம்கள் மூலமும் கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் விஷ்ணு சந்திரன் உத்தரவு படி மாநகர நல அலுவலா் டாக்டா் சரோஜா தலைமையில் திருநெல்வேலி நகரம் ஈசான விநாயகா் கோயில் அருகில் கபசுரரக் குடிநீா் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டல சுகாதார அலுவலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா் முருகன், துப்புரவு மேற்பாா்வையாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து மாநகர நல அலுவலா் சரோஜா கூறுகையில், திருநெல்வேலியில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுஒத்துழைப்பு அளித்து, கரோனா இல்லாத மாநகராக திருநெல்வேலியை உருவாக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT