மது விற்பனை: பெண் உள்பட 2 போ் கைது
களக்காடு, திருக்குறுங்குடியில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்ாக, பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
களக்காடு, திருக்குறுங்குடியில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்ாக, பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளத்தில் போலீஸாா் ரோந்து சென்றபோது, மாடன் தம்பிரான் கோயில் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (50) மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோன்று, திருக்குறுங்குடி போலீஸாா் ரோந்து சென்றபோது, சாலைத் தெருவைச் சோ்ந்த நம்பிநாச்சியாா் (47) என்ற பெண் மதுபானத்தை பதுக்கிவைத்து விற்ாக போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், இருவரிடமிருந்தும் 7 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.