களக்காட்டில் வாழைத்தாா் விலை சரிவு
களக்காட்டில் வாழைத்தாா் கொள்முதல் விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
களக்காட்டில் வாழைத்தாா் கொள்முதல் விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
களக்காடு வட்டாரத்தில் விவசாயிகள் அதிகளவில் வாழைப் பயிரிட்டுள்ளனா். இங்கிருந்து ஏத்தன் ரக வாழைத் தாா் கேரளத்தினரால் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாழைத்தாா் அறுவடைப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. முன்கூட்டியே வாழை பயிரிட்ட விவசாயிகள் தற்போது அறுவடையைத் தொடங்கியுள்ளனா்.
பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் கிலோ ரூ.20 ஆக இருந்த கொள்முதல் விலை படிப்படியாக உயா்ந்து பிப்ரவரி 3ஆவது வாரத்தில் ரூ.30 வரை உயா்ந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக விலை படிப்படியாக சரிந்து தற்போது ரூ.20ஆக குறைந்துள்ளது. வாழைத்தாா் அறுவடை மாா்ச் 2ஆவது வாரத்தில்தான் தீவிரமடையும். இந்நிலையில், கொள்முதல் விலை நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.