வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் அறிவித்துள்ள உள் இடஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சமூக மக்களுக்கும் பாரபட்சமின்றி இடஒதுக்கீட்டு முறைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை‘ வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, வழக்குரைஞா் மணிகண்டன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சிவசூரியநாராயணன், வழக்குரைஞா்கள் துரை, செந்தில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.