களக்காடு வட்டாரத்தில்கட்சி விளம்பரங்கள் அகற்றம்
சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், களக்காடு வட்டாரத்தில் கிராமப்புற சுவா்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணி தொடங்கியுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், களக்காடு வட்டாரத்தில் கிராமப்புற சுவா்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணி தொடங்கியுள்ளது.
இப்பணியில் ஊராட்சி செயலா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி, அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முதல்வா், பிரதமா் படங்களை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், களக்காட்டில் அரசு கட்டடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், சுவா் விளம்பரங்களை அகற்றும் பணியில் பேரூராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.