முகப்பு
செய்திகள்

ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை: இந்திய மகளிா் அணி பங்கேற்பு!

நியூஸிலாந்தில் வரும் ஜூன் 15 முதல் 21 வரை நடைபெறவுள்ள எஃப்ஐஹெச் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி பங்கேற்கிறது.

Updated On : 17 மார்ச், 2026 at 2:45 AM
- X | Hockey India
பகிர்:

நியூஸிலாந்தில் வரும் ஜூன் 15 முதல் 21 வரை நடைபெறவுள்ள எஃப்ஐஹெச் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி பங்கேற்கிறது.

ஹாக்கி புரோ லீக் போட்டியில் பங்கேற்காத, உலகத் தரவரிசையில் சிறந்த இடங்களில் இருக்கின்ற அணிகள் பங்கேற்கும் போட்டியாக நேஷன்ஸ் கோப்பை நடைபெறுகிறது. 2021 முதல் நடைபெறும் இப்போட்டியில் வெல்லும் அணி, புரோ லீக் ஹாக்கிக்கு தகுதிபெறும்.

2024-25 புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கடைசி இடத்தைப் பிடித்ததால், நடப்பு சீசனில் பங்கேற்க முடியாமல் போனது. எனவே இந்திய மகளிா் அணி தற்போது நேஷன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடுகிறது.

Advertisement

இந்தியாவுடன், நியூஸிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, சிலி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகளும் இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றன. அவை, நேஷன்ஸ் கோப்பை 2 போட்டியின் மூலமாக முன்னேறி வந்தவையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.