FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்...

Updated On : 25 ஏப்ரல் 2026, 1:13 pm IST
முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்... - கோப்புப் படம் | எக்ஸ்
பகிர்:

ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் மற்றும் அவரது சகோதரர் பல்பீர் சிங் கிரேவால் ஆகிய இருவரும் கடந்த 1968 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம்பெற்றனர்.

இந்திய விளையாட்டுத் துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒன்றாக தேசிய அணியில் விளையாடுவது அரிய நிகழ்வாகக் கருதப்படும் நிலையில், கிரேவால் சகோதரர்கள் இடம்பெற்ற இந்திய ஹாக்கி அணி மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பஞ்சாபின் ஜிராக்பூரில் உள்ள தனது இல்லத்தில் 84 வயதான குர்பக்ஸ் சிங் கிரேவால் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) மாலை திடீர் மாரடைப்பால் காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, குர்பக்ஸ் சிங் மேற்கு ரயில்வே துறையின் விளையாட்டுப் பிரிவு அதிகாரியாகவும் மும்பை ஹாக்கி சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்து, ஏராளமான வீரர்களை இந்திய அணியில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Former Indian hockey player Gurbax Singh Grewal, who won a bronze medal at the Olympics, has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments