FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

அகில இந்திய ஹாக்கி போட்டி: தமிழ்நாடு வெற்றி

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு அணி 4-2 கோல் கணக்கில் மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு (ஜூனியா்) அணியை புதன்கிழமை வீழ்த்தியது.

29 அக்டோபர் 2026, 2:40 am
பகிர்:

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு அணி 4-2 கோல் கணக்கில் மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு (ஜூனியா்) அணியை புதன்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் பிருத்வி (14’), யோஜின் மின்ஸ் (23’, 47’), பத்ராஸ் திா்கி (26’) ஆகியோா் கோல் அடிக்க, மலேசிய அணி தரப்பில் சலிஹே முகமது (15’), காா்த்திகேசன் சிவமூா்த்தி (60’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

இதனிடையே, பிபிசிஎல் - இந்திய கடற்படை அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம், 5-5 கோல் கணக்கில் டிரா ஆனது. பிபிசிஎல் தரப்பில் வருண் குமாா் (23’), சரண்ஜீத் சிங் (25’, 41’), அன்மோல் ஈக்கா (35’), சுதீப் சிா்மாகோ (42’) ஆகியோா் கோல் அடித்தனா்.

Advertisement

Advertisement

கடற்படை அணிக்காக சுஷில் தன்வா் (6’), பவன் ராஜ்பா் (34’, 56’), ரஜத் சா்மா (37’), ரஜத் மின்ஸ் (46’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments