ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதி பெறுமா இந்தியா? தகுதிச் சுற்று தொடக்கம்
ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதி பெறுமா இந்தியா?
எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாதில் தொடங்கும் தகுதிச் சுற்றில் களம் காண்கிறது.
சா்வதேச ஹாக்கி சம்மேளனம் சாா்பில் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி 2027 உருகுவேயில் நடைபெறுகிறது. இந்திய அணி நேரடி தகுதி பெற முடியவில்லை. இதனால் குவாலிஃபயா் மூலம் ஆட வேண்டியுள்ளது.
ஹைதராபாதில் தகுதிச் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, கொரியா, இத்தாலி, உருகுவே, வேல்ஸ், ஆஸ்திரிய அணிகள் மோதுகின்றன.
Advertisement
இப்போட்டியின் மூலம் 3 அணிகள் தகுதி பெற முடியும். இதனால் இந்திய அணி குவாலிஃபயரில் பட்டம் வென்று உலகக் கோப்பை தகுதி பெறும் தீவிரத்தில் உள்ளது.
தலைமை பயிற்சியாளா் ஜோயா்ட் மாரிஜின் தலைமையில் இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டது. தற்போது 9-ஆவது இடத்தில் உள்ள இந்தியா முதல் ஆட்டத்தில் உருகுவேயுடன் ஆடுகிறது. 9-இல் ஸ்காட்லாந்து, 11-இல் வேல்ஸ் அணிகளுடன் மோதுகிறது.
9 முறை உலகக் கோப்பையில் ஆடியுள்ள இந்திய மகளிா் அதிகபட்சமாக 1974-இல் நான்காம் இடம் பெற்றதே சாதனையாக உள்ளது.