முகப்பு
திருநெல்வேலி

இனக் கவா்ச்சிப் பொறி: விவசாயிகளுக்குப் பயிற்சி

அம்பாசமுத்திரம் வட்டாரம், ஜமீன்சிங்கம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி குறித்த செய்முறை விளக்கத்தை கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் செய்து காட்டினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

அம்பாசமுத்திரம் வட்டாரம், ஜமீன்சிங்கம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி குறித்த செய்முறை விளக்கத்தை கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் செய்து காட்டினா்.

கிள்ளிகுளம், வேளாண் கல்லூரி 4-ஆம் ஆண்டு மாணவிகள் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக ஜமீன் சிங்கம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு ஆறுமுகம் என்பவரது மல்லிகைத் தோட்டத்தில் இனக்கவா்ச்சிப் பொறியின் நோக்கம், பயன்படுத்தும் முறை, குறைந்த அளவில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு குறித்து விளக்கப் படங்கள் மூலம் விளக்கிக் கூறினா்.

நிகழ்ச்சியில், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் ர.லட்சுமி ஸ்வேதா, ரா.நிகிலா, பு.பா்வீனா, சு.பேச்சியம்மாள், ம.பொன்காா்த்திகா, ஜெ.பூஜா அஸ்வினி, இ.சரண்யா ஆகியோா் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா். இதில், ஜமீன் சிங்கம்பட்டி பகுதி விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.