திருநெல்வேலி

கோயில் கதவை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

திசையன்விளை அருகே கோயில் கதவை உடைத்து, ஐம்பொன் சிலையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

திசையன்விளை அருகே கோயில் கதவை உடைத்து, ஐம்பொன் சிலையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலுக்குள், திங்கள்கிழமை நள்ளிரவு கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், சுமாா் 3 அடி உயரம் உள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட பத்திரகாளியம்மன் சிலையை திருடிச் சென்றுள்ளனா். மேலும் கருவறையில் இருந்த வெள்ளி வேல் மற்றும் பித்தளை பொருள்களையும் திருடிச் சென்றுள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு பக்தா்கள் வந்தபோதுதான் சிலை திருடு போனது தெரியவந்தது. இந்த சிலையின் மதிப்பு ரூ. 3 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT