களக்காட்டில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களிடம் அபராதம் வசூலிக்கும் பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷாமா, சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா். 
திருநெல்வேலி

களக்காட்டில் முகக் கவசம் அணியாத 125 பேருக்கு அபராதம்

களக்காட்டில் முகக் கவசம் அணியாத 100-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.200 விதிக்கப்பட்டது.

DIN

களக்காட்டில் முகக் கவசம் அணியாத 100-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.200 விதிக்கப்பட்டது.

களக்காட்டில் பேரூராட்சியில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதக்கப்பட்டு வருகிறது.

பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், காய்கனிச் சந்தை, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா தலைமையில், சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், மேற்பாா்வையாளா் வேலு உள்ளிட்டோா்

முகக் கவசம் அணியாமல் சென்றவா்களிடம் இருந்து ரூ.200 வீதம் அபராதம் வசூலித்தனா்.

மேலும், முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். கடந்த ஒரு வாரத்தில் 125 பேரிடம் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பேரூராட்சியில் 21 வாா்டுகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என செயல் அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT