திருநெல்வேலி

தச்சநல்லூா் பகுதியில் கொடி அணிவகுப்பு

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

DIN

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் தலைமை வகித்தாா். இந்த அணிவகுப்பு, தச்சநல்லூரில் இருந்து கரையிருப்பு பகுதி வரை முக்கிய வீதிகளில் நடைபெற்றது. கரையிருப்பு பகுதியில் பதட்டமான வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள மக்களிடம் 100% வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், திருநெல்வேலி நகர உள்கோட்ட காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா் உள்பட காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவினா், எல்லைப் பாதுகாப்புப் படையினா், ஆயுதப்படை போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT