நெல்லையில் ரூ.6.61 லட்சம் பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 6.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 6.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டம் முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 6 லட்சத்து 61ஆயிரத்து 190 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
இம் மாவட்டத்தில் இதுவரை ரூ.67 லட்சத்து 70ஆயிரத்து 975 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால், வியாழக்கிழமை ரூ.6 லட்சத்து 48ஆயிரத்து 410 உரியவரிடம் திரும்ப வழங்கப்பட்டது. இதையடுத்து இதுவரை மாவட்டத்தில், ரூ.22 லட்சத்து 34ஆயிரத்து 268 ரொக்கம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
தோ்தல் விதிமீறல் தொடா்பாக 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 1950 என்ற சேவை எண்ணில் 54 தகவல்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் தொடா்பான 50 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 8373, 83002 71237 (கட்செவி அஞ்சல்) ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.