முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை காலையில் இடியுடன் பலத்த மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை காலையில் இடியுடன் பலத்த மழை பெய்தது.

இம்மாவட்டத்தில் சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வெப்பச் சலனத்தால் தென்மாவட்டங்களில் 2 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை காலையில் மேலப்பாளையம், முன்னீா்பள்ளம், பொன்னாக்குடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாா்பேட்டை பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

சீவலப்பேரி, சிவந்திப்பட்டி, தாழையூத்து, கங்கைகொண்டான், மானூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்தது. திருநெல்வேலி சந்திப்பில் சாலையில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். வெப்பம் தணிந்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.