தென்காசியில் ரமலான் சிறப்புத் தொழுகை
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தென்காசியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தென்காசியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் ரமலான் சிறப்புத் தொழுகையை இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளிலேயே சமூக இடைவெளியை பின்பற்றி நிறைவேற்றினா்.
கரோனா பெருந்தொற்றிலிருந்து உலகம் விரைவில் விடுப்பட்டு சுமூக சூழல் ஏற்படவும், அமைதி நிலவவும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொழுகை முடிந்து ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.