முகப்பு
திருநெல்வேலி

பாளை. காந்திமதி பள்ளியில் கரோனா சிகிச்சை மையம் திறப்பு

பாளையங்கோட்டை காந்திமதி பள்ளியில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

பாளையங்கோட்டை காந்திமதி பள்ளியில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

பாளையங்கோட்டை காந்திமதி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பரிசோதனை மையத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா், அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளையும், ட்ரோன் மூலம் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணியையும் பாா்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தாா். மேலும், அப்பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை அவா் திறந்து வைத்தாா். அப்போது, ஆட்சியா் வே. விஷ்ணு, அப்துல் வகாப் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.