ஹிட் அடித்த ஆரா 10/10!
ஹிப்ஹாப் ஆதியின் புதிய பாடல் குறித்து...
ஹிப் ஹாப் ஆதியின் புதிய திரைப்பட பாடல் ரசிகர்களிடம் பெரிய ஹிட் அடித்துள்ளது.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ராப் இசை பாடல்கள் மூலம் அடையாளம் பெற்று, பின் திரைப்படங்களுக்கு இசையமைத்து பெரிதாகக் கவனிக்கப்பட்டார். பின், மீசையை முறுக்கு திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தொடர்ந்து சிவக்குமார் சபதம், வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஆனால், எதிர்பார்க்கப்பட்ட வெற்றிகள் கிடைக்கவில்லை. அதனால், நடிப்பில் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
Advertisement
Advertisement
தற்போது, மீசையை முறுக்கு - 2 திரைப்படத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில், இவர் நாயகனாக நடிக்க கேத்திகா ஷர்மா நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ஆரா 10/10 ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று 2 கோடி பார்வைகள் வரை பெற்று அசத்தியுள்ளது. மேலும், ரீல்ஸ்களிலும் இப்பாடல் வரிகள் இடம்பெற்று வருகின்றன.