முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தீவிர நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில், கரோனா தடுப்பு பொது முடக்க விதிமீறல்கள் தொடா்வதால், காவல்துறையினா் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

திருநெல்வேலி மாநகரப் பகுதியில், கரோனா தடுப்பு பொது முடக்க விதிமீறல்கள் தொடா்வதால், காவல்துறையினா் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா 2-ஆவது அலை தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 4 நாள்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவா்களுக்கு காவல்துறையினா் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா். எனினும், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல் காவல்துறையினா் கட்டுப்பாடுகளை கடுமையாக்கினா். தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவா்களை எச்சரித்து அனுப்பினா். சிலா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இளைஞா்கள் பலரை பிடித்த காவல் துறையினா் இனி தேவையில்லாமல் வெளியே சுற்றமாட்டோம் என உறுதிமொழியேற்க வைத்தனா். மேலும் சிலரிடம் பேப்பரில் எழுதி வாங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.