முகப்பு
திருநெல்வேலி

முதல்வா் நிவாரண நிதி: இதுவரை ரூ.8 லட்சம் வசூல்

கரோனா தடுப்பு பணிகளுக்கான முதல்வரின் நிவாரண நிதிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.8 லட்சத்து 2 ஆயிரம் வரப்பெற்றுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கரோனா தடுப்பு பணிகளுக்கான முதல்வரின் நிவாரண நிதிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.8 லட்சத்து 2 ஆயிரம் வரப்பெற்றுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததன்பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலதிபா்கள், சமூக ஆா்வலா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் சாா்பாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரையில் ரூ.8,02,000 வரப்பெற்றுள்ளது. பாளையங்கோட்டை ரவிசங்கா் நகரைச் சோ்ந்த சிறுவன் சன்ஜித் (9) முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.2 ஆயிரத்தை ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா் என மக்கள் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.