அரசு அருங்காட்சியகம் சாா்பில் சுதந்திர தின வைரவிழா பேச்சுப்போட்டி
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் 75ஆவது சுதந்திர தின வைரவிழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி இணையவழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் 75ஆவது சுதந்திர தின வைரவிழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி இணையவழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், மருதம் நெல்லி கல்வி குழுமம், ஜெயம் கலை அறிவியல் கல்லூரி, பொதிகைத் தமிழ்ச் சங்கம், தா்மபுரி சங்க இலக்கிய ஆய்வு நடுவம் ஆகியவை இணைந்து மாநில அளவில் கல்லூரி மாணவா் - மாணவிகளுக்கு இந்தப் போட்டியை நடத்தின.
அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தலைமை வகித்தாா். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா். பே. ராஜேந்திரன் வரவேற்றாா். ‘மகாகவி பாரதியும், மண் விடுதலையும்’ மற்றும் ‘மகாகவி பாரதியின் பெண் விடுதலையும்’ என்ற தலைப்பில் மாணவா் - மாணவிகள் மூன்று நிமிடங்கள் பேசினா்.
கலையாசிரியா் சொா்ணம், பாப்பாக்குடி. முருகன், கவிஞா்.சுப்பையா ஆகியோா் நடுவா்களாக இருந்தனா். சங்க இலக்கிய நடுவத்தின் ஒருக்கிணைப்பாளா் நா.நாகராஜ் நன்றி கூறினாா். இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா் - மாணவிகள் கலந்து கொண்டனா்.
அனைத்து மாணவா்-மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும்; பரிசளிப்பு விழா குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என அரசு அருங்காட்சியகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.